மட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

யானை தாக்குதலில் இருந்து காக்க அமைக்கப்பட்ட பாதுகாப்பு மின்வேலியில் சிக்கி இரு தமிழ்விவசாயிகள் பலியாகியுள்ளார்கள். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் உன்னிச்சை கரவெட்டியாறு கிராமத்தில் உறவினராக தங்கையா மற்றும் 7 பிள்ளைகளின் தந்தை மணிவண்ணண் எனும் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.